திருப்பாவை பாசுரம் 9- Thiruppavai pasuram 9 in Tamil
AstroVed’s Astrology Podcast - Un podcast de AstroVed - Les mercredis
Catégories:
பகவான் எந்த அளவுக்கு முக்கியமோ, அவனது அடியவர்களும் அந்த அளவுக்கு முக்கியமானவர்கள். இது வரை கோபிகையின் குணத்தை சொல்லி எழுப்பியவர்கள் இந்த பாடலில் மாமன் மகள் என்று உறவு முறை கூறி ஒரு கோபிகையை விளித்து எழுப்புகிறார்கள். மணிகளால் இழைக்கப்பட்ட மாடத்தில் சுற்றும் விளக்கெரிய, தூபம் கமழ இருக்கும் இடத்தில் உறங்குபவளை கதவைத் திற என்று கூறி எழுப்புகிறார்கள். பகவத் விஷயத்திற்கு பகவானை அனுபவிக்க உறுதுணையாக இருக்கும் உறவுகளை நாம் விடக் கூடாது என்பதை உணர்த்தும் உயர்ந்த அர்த்தம் பொதிந்த இந்தப் பாடலில் நாம் காணவிருக்கும் திவ்ய தேசம் திருக்கடிகை சோளிங்கர். இந்தப் பாடலின் முழுப் பொருளையும் அனுபவிக்க இந்த வீடியோவை முழுவதும் காணுங்கள்.
